Traffic Signal இல்லாத நகரம் எது தெரியுமா? பிரச்சினையே இருக்காது!
தற்போது வளர்ந்து வரும் நவீனமயமாக்கலினால் வாகனங்களின் நெருச்சல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் டிராபிக் சிக்னல் இல்லாத நகரம் ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற நாடுகளிலும் பார்க்க இந்தியாவில் போக்குவரத்து நெருச்சல் இல்லாத இடங்களே பார்ப்பது கடினம்.
அந்த வகையில், இப்படியொரு நகரம் இருப்பது என்பது அதிர்ச்சியாக்கியுள்ளது. இங்கு வாகனங்கள் எங்கும் நிற்காமல் சாலையில் சுதந்திரமாக சென்றுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பில் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
Traffic Signal இல்லாத நகரம்

ராஜஸ்தானில் சம்பல் ஆற்றின் (Chambal River) கரையில் அமைந்துள்ள கோட்டா என்ற இடம் முதல் இடத்தை பிடிக்கிறது. பூட்டானில் உள்ள திம்பு நகரத்திற்கு பின்னர் இந்தியாவில் உள்ள கோட்டா என்ற இடம் இரண்டாவது பிடித்துள்ளது.
கோட்டாவின் நகர்ப்புற மேம்பாட்டு அறக்கட்டளை (UIT), ஒருபோதும் நிற்காத போக்குவரத்தை நோக்கமாக கொண்டு இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
வாகனங்கள் நெரிசல் ஏற்படும் சமயத்தில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கல்களை சந்திக்கின்றன. இதனை கவனத்திற்கு கொண்டு நகர அதிகாரிகள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.

கோட்டா நகரில் போக்குவரத்திற்காக முக்கிய சந்திப்புகளில் இரண்டு டஜன் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன. இது போக்குவரத்து நெருச்சலை குறைத்து, விபத்து மற்றும் எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்கிறது.
போக்குவரத்து நெரிசல் பிரச்சினையுடன் தினமும் போராடிக் கொண்டிருக்கும் நகரங்களுக்கு கோட்டா சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |