பாரம்பரிய கேரள உள்ளி தீயல் - சூடான வெள்ளை சாதத்திற்கு இந்த ஒரு குழம்பு போதும்
வெங்காயத்தை வைத்து புளிப்பு சுவையில் பாரம்பரிய கேரள உள்ளி தீயல் கறியை 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
உள்ளி தீயல்
உள்ளி தீயல் என்பது புளி சார்ந்த ஒரு ரெசிபியாகும். இதற்கு பெரிதாக வெங்காயம் வெட்டி போட்டு செய்வார்கள். வறுத்து அரைத்த தேங்காய் மசாலா விழுதுடன் இந்த ரெசிபி செய்யப்டுகின்றது.
இது ஒரு பாரம்பரிய கேரள வெங்காயக் கறி என்றும் சொல்லலாம். இது பொதுவாக அதிகமானோர் சாதத்துடன் தான் சாப்பிடுவார்கள்.
சாதத்துடன் சாப்பிட தான் இது சுவையாகவும் இருககும். இப்போது இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில், புளியை வெந்நீரில் 15 - 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதற்கிடையில், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு மற்றும் வெந்தயத்தை போட்டு வறுக்கவும்.
அது வறுத்ததும், கடைசியாக கொத்தமல்லி விதைகளைச் சேர்க்கவும். பின்னர் கறிவேப்பிலை கொஞ்சமாக எடுத்து சுத்தம் செய்து அதில் சேர்க்கலாம்.
இதை நன்றாக ஆற விடவும். பின்னர் தேங்காய் சேர்த்து வறுக்கத் தொடங்குங்கள். அடி பிடித்து கொள்ளாமல் வறுத்துக் கொண்டே இருங்கள், நிறம் மாற ஆரம்பித்ததும், இந்த கட்டத்தில் 2-3 சிறிய வெங்காயங்களைச் சேர்க்கவும்.
சுடரைக் குறைத்து, அது ஆழமான சிவப்பு நிறமாக மாறும் வரை எரியாமல் கவனமாக வறுக்கவும். இதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். பின்னர் புளியை பிளிந்து சாறு எடுக்கவும்.
பின்னர் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து அரைக்கவும். அதன் பிறகு, குளிர்ந்த வறுத்த பொருட்களை சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
மென்மையாக அரைத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு விதைகளைத் தூவவும். அதனுடன் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கி மென்மையாகும் வரை வதக்கவும். அதன் பிறகு, புளி சாறு சேர்க்கவும். அதை கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதைச் அதில் சேர்க்கவும்.
பின்னர் சரியாக தண்ணீர் சேர்த்து (1 முதல் 1 & ¼ கப் சேர்க்கவும்) நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். இதை 12-15 நிமிடங்கள் அல்லது கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்து விடுங்கள். இது ஆறியவுடன் கெட்டியாக இருக்கும். சமைத்த சாதத்துடன் உள்ளி தீயலை வைத்து அப்பளம் வைத்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |