ஏற்காடு மலைப் பாதை வெளிநாட்டவர் செய்த சாகசம்.. ஒற்றை வீடியோவால் பரபரப்பு
ஏற்காட்டு மலைப்பாதையில் வெளிநாட்டவர் ஒருவர் அதிவேக ஸ்கேட்போர்டிங் சாகசம் செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்காட்டில் நடந்த சாகசம்
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் அழகை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
அவர்கள் கற்றுக் கொண்ட வித்தைகளை இது போன்ற நாடுகளில் காட்டி சில பயணிகள் மகிழ்வார்கள். இதனை வெளிகாட்டும் பொழுது அது சிலருக்கு மகிழ்ச்சியாகவும், சிலருக்கு வியப்பாகவும் இருக்கும்.
இதன்படி, ஏற்காட்டின் மலைப்பாதையில் வாகனங்கள் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. அப்போது வெளிநாட்டு பயணியொருவர், அதிவேக ஸ்கேட்போர்டிங் சென்றுள்ளார். அவரை காணொளியெடுத்தப்படி இன்னொருவரும் பின் தொடர்ந்து சென்றுள்ளார். வேகமாக செல்லும் பொழுது இரண்டு வாகனங்களுக்கு மிக அருகில் சென்று விட்டார்.

வலை வீசி தேடப்படும் சுற்றுலா பயணி
இந்த காணொளியை பார்க்கும் பொழுது சில நிமிடங்கள் திக்திக் என்று தான் இருக்கிறது. அடையாளம் தெரியாத வெளிநாட்டு சுற்றுலா பயணி இப்படி செய்த காரணத்தினால் மற்ற பயணிகள் அச்சமடைந்துள்ளனர். ஏனெனின் ஏர்காடு மலை பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளது.

இதனால் அந்த பகுதியில் ஒரு அளவுக்கு மேல் வேகமாக செல்ல முடியாது. இந்த சம்பவம் மற்ற வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக புகார் பதிவு செய்யப்படவில்லை.
இது போன்ற வேறு எந்த சம்பவங்களும் பதிவு செய்யப்படக் கூடாது என நினைத்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார், வாகனப் போக்குவரத்து நிறைந்த மலைச் சாலைகளில் இது போன்று பயணிப்பது குற்றம் எனக் கூறியுள்ளார்.
காணொளியை இங்கு பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |