மதுரையில் நீங்க பார்க்க மறந்த இடங்கள்! முழு விவரங்களுடன் கூடிய விளக்கம்!
பொதுவாக அதிகமாக சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடுகளில் ஒன்றாக இந்தியா பார்க்கப்படுகின்றது.
இந்தியா வரும் பயணிகள் தமிழகம், டெல்லி, கோடைக்காணல் போன்ற நகரங்களை சுற்றி பார்த்து தன்னுடைய பயணத்தை முடித்து கொள்கிறார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் விட மதுரையில் அதிகமாக சுற்றுாத்தலங்கள் இருக்கின்றன. மேலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக ஆன்மிகம் சார்ந்த இடங்களை விரும்புவதால் இந்தியா போன்ற நாடுகளுக்கு வருகை தருகிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான ஜவுளி மையமாகவும், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஏற்றுமதியாளராகவும் உள்ள நகரங்களில் ஒன்றாக மதுரை இருக்கின்றது.
இங்கு புகழ்பெற்ற மீனாட்சி கோயில் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான யாத்திரைத் தலமாகவும், கட்டிடக்கலை மதிப்பிற்காகவும் புகழ்பெற்றது.இதனால் மதுரையில் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை பார்க்கக்கூடியதாய் உள்ளன.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட மதுரையில் அப்படி என்னென்ன இருக்கின்றன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
மதுரையில் பார்க்க வேண்டிய இடங்கள்
1. மீனாட்சி அம்மன் கோவில்
தமிழர்களின் பண்பாட்டின் படி வழிபாடுகளில் முக்கியமான வழிபாடு அம்மன் வழிபாடாகும்.
இந்து பெயர்பெற்ற கோயில்களில் ஒன்று தான் மீனாட்சி அம்மன் கோவில். மதுரை மாநகரில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட கோயிலில் பிரதான மண்டபத்தில் சிக்கலான கலைப்படைப்புகள் அதிகமாக உள்ளன.
இதில் காணப்படும் கலைப்படைப்பையும் அம்மனின் அருளையும் பெற்றுக் கொள்வதற்காக அதிகமாக பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள்.
2. வைகை அணை
மதுரையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வைகை அணையும் ஒன்று. இந்த அணையின் மூலோபாய இடத்தின் காரணமாக புகழ்பெற்ற பருத்தி ஜவுளித் தொழில் செழித்து வளர்கிறது.
இந்த ஆணையை சுற்றி பயணிக்கும் பொழுதும் கண்களுக்கு குளிர்ச்சியான இடங்களை பார்க்கலாம்.
3. திருமலை நாயக்கர் மஹால்
இந்த மண்டபம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு பழமையான இந்த அரண்மனை கிபி 1636 இல் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.
இந்த வளாகத்தில் உள்ள அழகான முற்றமானது குடும்பத்துடன் சிறிது நேரம் செலவழிக்கவும் சில அற்புதமான படங்களை கிளிக் செய்யவும் ஏற்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
