சிங்கார சென்னையில் நாம் காணாத சில இடங்கள்.. குழந்தைகளுடன் சென்று பாருங்க!
பொதுவாக இந்தியாவில் சென்னை எனக்கூறும் போது நினைவிற்குள் வருவது மெரினா பீச், மயிலாப்பூர் கோயில், தலைவர்களின் சமாதி, காந்தி மண்டபம் ஆகிய இடங்கள் தான்.
மேற்குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் சென்னையில் மத்தியப்பகுதியில் அமைந்திருப்பதால் இலகுவாக சென்று வரலாம்.
இதனை தொடர்ந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இது போன்ற இடங்களில் அதிகமாக காணலாம்.
மாறாக சென்னையில் இருக்கும் இடங்களை சுற்றி பார்க்க போனால் நம்முடைய நாட்கள் போதாது. அவ்வளவு இடங்கள் இருக்கின்றது.
மேலும் கோடைக்காலங்கள் வந்து விட்டால் குழந்தைகளை வீட்டிலேயே வைத்து கொண்டு விடுமுறைக்கு கூட வெளியில் அனுப்பாமல் இருப்பார்கள்.
இது போன்ற நேரங்களில் குழந்தைகளுடன் சிறிய சுற்றுலா பயணத்தை சென்னைக்குள் ஆரம்பியுங்கள். இதற்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
அந்த வகையில் சிங்கார சென்னையில் நாம் அறியாத சில அழகிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
1.முதலை பார்க்
கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருப்பது தான் இந்த “மெட்ராஸ் முதலை பார்க்”.இந்த இடம் முதலைகள் மற்றும் ஆமைகள் சரணாலயமாக பார்க்கப்படுகின்றது. குழந்தைகளுடன் வரும் போது அவர்களுக்கு தெரியாத நன்னீர் முதலைகள், பிளாக் வாட்டர் முதலைகள் என அனைத்து வகையான முதலைகளையும் பார்த்து கொள்ளலாம்.
2. மகாபலிபுரம்
மகாபலிபுரம் என பார்க்கும் போது கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பார்க்கப்படுகின்றது. பல்லவர்களின் கட்டிக்கலை சிற்பங்கள், உணவகங்கள் மற்றும் மண்டபங்கள் ஆகியவற்றை இங்கு சான்றுகளுடன் காணலாம். இங்கு வருவதால் குழந்தைகளுக்கு தெரியாத வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
3. புலி குகை
சென்னையில் இருக்கும் பிரபல்யமான சுற்றுலா தலம் தான் புலி குகை. இங்கு பல்லவர் கால குகைகள், கல்வெட்டுகளை, சிற்பங்கள் இருக்கும். அத்துடன் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய கல்வெட்டுக்கள் இருக்கும்.
4. சீஷெல் மியூசியம்
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மியூசியம் இது தான். இந்த மியுசியம் மகாபலிபுரத்தில் பின் புறத்தில் அமைந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள கடல் சிப்பிகள் எல்லாம் ஆய்வாளர் ராஜா உலக கடற்கரை இருந்து எடுக்கப்பட்டவைகள் ஆகும். மேலும் வித்தியாசமான சங்குகளை இங்கு காணலாம். இவற்றையும் தாண்டி குழந்தைகளை கவர டைனோசரஸ் பார்க்கும் இங்கு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |