வீட்டில் ஆமை சிலையை வைத்தால் அதிர்ஷ்டமா?
ஆமை மகாவிஷ்னுவின் அவதாரமாக போற்றப்படும் நிலையில், ஆமை என்றால் துரதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். அது உண்மையா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆமை சிலை அதிர்ஷ்டமா?
விஷ்னு பகவான் கூர்ம அவதாரம் எடுத்து மலையை தனது முதுகில் தாங்கி நின்றதாக கூறப்படும் நிலையில், ஆமையும் விஷ்னு அவதாராமாக பார்கக்ப்படுகின்றது. இதனால் அதிர்ஷ்டம் தரக்கூடியது என்றும் நிதி நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு பண வருமானத்தை கொடுக்குமாம்.
உயிருள்ள ஆமையை எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் வளர்க்கக்கூடாது. ஏனெனில் இவை எதிர்மறயை ஆற்றலை உருவாக்குமாம்.
ஆமை சிலைகளை வீட்டில் வைத்தால் அது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகின்றது. ஆமை உங்களைக் கடந்து சென்றால் அதனை கையில் எடுக்காமல், அது போகும் திசையிலேயே பாதுகாப்பாக விட்டுவிடவும்.
ஆமை சிலைகள் மங்களகரமானதாகவும், வீட்டில் வாஸ்து தோஷங்களை நீக்கவும் செய்கின்றது. ஆனால் அலுவலகத்தில் வைக்க விரும்புவர்கள் ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி வைக்கவும்.
வாஸ்து தோஷங்கள் உள்ள வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் என்பதால் ஆமை சிலைகளை வைத்தால் பண நெருக்கடிஈ கடன் பிரச்சனை அதிகரிக்கும்.
உலோகத்தினால் ஆன ஆமை சிலையை வீட்டில் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் வைக்கவும், இவை குழந்தைகளின் வளர்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும்.
மரத்தால் ஆன ஆமை சிலைகளை நாம் வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கலாம். அது காரிய வெற்றியை உண்டாகும்.
ஸ்படிக ஆமையை நாம் தென்மேற்கு திசையில் வைக்கலாம். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும். வடகிழக்கு பகுதியில் ஸ்படிக ஆமையை வைப்பதனால் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
ஆமை சிலையை வாங்க விரும்பினால் புதன், வியாழன், வெள்ளி போன்ற வார நாட்களில் வாங்கலாம். சுக்கிர ஹோரை, குரு ஹோரையில் ஆமை சிலைகளை வாங்கலாம். பணத்தை ஈர்க்கும் சக்தி ஆமை சிலைக்கு உள்ளதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |