TCDC: சிங்கப்பூரின் சுற்றுலா தள வடிவில் ஷிவானி செய்த dish! இவ்வளவு பிரபலமா?
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும், டாப் குக் டூப் குக் நிகழ்சியில் குக்காக பங்கேற்று வரும் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஷிவானி கார்டன்ஸ் பை தி பே என்ற சிங்கப்பூரின் புகழ் பெற்ற சுற்றுலா தளத்தின் வடிவத்தை அடிப்படையாக கொண்டு தயாரித்த dish இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
கார்டன்ஸ் பை தி பே
சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அட்டகாசமான தளங்களின் பட்டியலில் கார்டன்ஸ் பை தி பே முக்கிய இடம் வகிக்கின்றது.

சூப்பர் ட்ரீ குரோவ் மற்றும் கிளவுட் ஃபாரஸ்ட் ஆகியவற்றை கொண்ட கார்டன்ஸ் பை தி பே சி பார்வையார்களை மயக்கும் ஒரு இடமாக அமைந்துள்ளது.
இது நகரத்தில் பசுமை மற்றும் தாவர மேம்பாடு மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் இது மூன்று தோட்டங்களைக் கொண்டுள்ளது.

இத்தோட்டமானது சுமார் 50 மீட்டர் (160 அடி) உயரம் வரை மரம் போன்ற அலங்கரிக்கப்பட்ட கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்ற புகழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவையில் குறித்த தளத்தை மையப்படுத்தி டாப் குக் டூப் குக் போட்டியாரர் ஷிவானி தயாரித்துள்ள dish இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |