2026ல் சுற்றுலா போக பிளான் இருக்கா? இது உங்களுக்குத்தான்
எக்ஸ்பீடியா, லோன்லி பிளானட் மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆய்வுகள் அடிப்படையில் சுற்றுலாவுக்கு மிகவும் சிறந்த இடங்கள் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அல்பேனியா போன்ற நாடுகள் இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளன.

அமெரிக்கா:
மொன்டானாவில் உள்ள பிக் ஸ்கை முதலிடத்தில் உள்ளது. இந்த இடம் அதன் அற்புதமான மலைகள் மற்றும் ஸ்கை ரிசார்ட்டுகளுக்குப் பிரபலமானது. மலையேற்றம் மற்றும் வனவிலங்கு சஃபாரிகளும் அடங்கும்.
ஜப்பான்:
கடற்கரைகள் மற்றும் யுனெஸ்கோ தளங்கள் இங்குள்ள முக்கிய இடங்கள். ரியுக்யுவான் பாரம்பரிய கண்காட்சி பார்வையாளர்களை ஈர்க்கும்.

தாய்லாந்து:
கோயில்கள், ஸ்டிரீட் ஃபுட் மற்றும் இரவு வாழ்க்கைக்கு பிரபலமானது. உள்ளூர் சந்தைகள் மற்றும் படகு சவாரிகள் பிரசித்தி பெற்றவையாக உள்ளது.
ஜெய்ப்பூர்:
அம்பர் கோட்டை மற்றும் வண்ணமயமான தெருக்கள் அனைவரையும் கவரும். கலாச்சார விழாக்கள் மற்றும் சந்தைகள் இங்கு சிறப்பு வாய்ந்தவை.

பெரு:
இங்குள்ள மச்சு பிச்சு (Machu Picchu) புகழ்பெற்ற மலை கோட்டை தென் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. இங்குள்ள உணவு வகைகள் மற்றும் மலையேற்ற அனுபவங்கள் வித்தியாசமான அனுபவங்களை வழங்குகிறது.