Top Cooku Dupe Cooku: வாகீசனை வாட்டி எடுக்கும் மோனிஷா- வெற்றிப் பெறுவார்களா?
டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் முதல் தடவையாக ஈழத்து பிரபலமான வாகீசனை, மோனிஷா வாட்டி எடுக்கும் காட்சி இணையவாசிகளை சுவாரஷ்யப்படுத்தியுள்ளது.
டாப்பு குக்கு டூப் குக்கு
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாகீசனை புலம்ப விட்ட மோனிஷா
இந்த நிலையில், சீசன் 2 -ல் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிவாங்கி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
மேலும் இரண்டாவது சீசனில் சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இலங்கை ராப் பாடகர் வாகீசனுக்கு ஜோடியாக மோனிஷா சென்றுள்ளார். அவர் ஏற்கனவே குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த காரணத்தினால் இந்த ஜோடி சுவார்ஷ்யமாக இருந்துள்ளது.
வாகீசனின் தமிழ் மோனிஷாவிற்கு புரியவில்லை. இதனால் இருவரும் பொருட்களை எடுத்துக் கொள்ள தடுமாறிக் கொண்டிருக்கிறார். இறுதியில் கடுப்பான வாகீசன், “ பாட்டு கூட பாடி விடுவேன். சமைப்பதற்கு பொருட்களை கொண்டு வர சொல்ல முடியலையே.. என்னுடைய அம்மா பாவம் அவருக்கு 10 விரலுக்கும் மோதிரம் செய்து போட வேண்டும்...” எனக் கூறுகிறார்.
மற்ற ஜோடிகளை விட இவர்களின் ஜோடி அதிகமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசியாக வந்த சிவாங்கியும் கலாய்த்து விட்டு சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |