சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 இடங்கள் என்னென்ன? முழு விபரம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக விடுமுறை தினங்களில் வீட்டில் தூங்கி நாட்களை கழிப்பதை விட வெளியிலுள்ள அழகான இடங்களை பார்த்து இயற்கையோடு பொழுதை கழிக்கலாம்.
அந்த வகையிலட் பட்ஜெட்டிற்கேற்ப நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய சொர்க்கம் தான் சிங்கப்பூர். அழகிய நாடுகள் பல இருந்தாலும் தனித்துவமான இடங்களால் சிங்கப்பூர் இன்றளவும் சுற்றுலா பயணிகளால் விரும்பப்படுகிறது.
மேலும் இங்கு செல்பவர்களின் பார்வைக்கு என பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே முதல் சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் வரை இடங்கள் இருக்கின்றன.
குடும்பம், குழந்தைகளுடன் சந்தோசமாக பொழுதை கழிக்க நினைப்பவர்கள் இங்கு தாராளமாக செல்லலாம்.
அந்த வகையில் சிங்கப்பூரில் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
சிங்கப்பூர்
1. மெரினா பே சாண்ட்ஸ்
இந்த இடமானது 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டமைக்கப்பட்டது. மெரினா பே சாண்ட்ஸில் சொகுசு ஹோட்டல், உணவகங்கள், எண்ணில் அடங்காத கடைகள், தியேட்டர், ஆர்ட் சயின்ஸ் மியூசியம் என பல இடங்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். அத்துடன் செயற்கை பனியால் செய்யப்பட்ட உட்புற சறுக்கு வளையத்தையும் கொண்டுள்ளது. இதனால் தான் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள்.
2. சிங்கப்பூர் ஃப்ளையர்
சிங்கப்பூர் சென்றால் மறக்காமல் பார்க்க வேண்டிய இடங்களில் ஃப்ளையரும் ஒன்று. நகரத்திற்கு மேலே வட்டமிடும்போது கார்கள் 28 பேர் வரை இதில் அமரலாம். மரினா விரிகுடாவில் அமைந்துள்ள ஃப்ளையர்ஸ் டெர்மினல் மூன்று தளங்களில் உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களை கொண்டுள்ளது.
3. புத்தர் டூத் ரெலிக் கோயில்
ஆன்மீகம் சார்ந்த இடங்களை சிங்கப்பூரில் பார்க்க வேண்டும் என நினைத்தால் இந்த இடத்திற்கு செல்லலாம். சீனர்களின் கடவுள் நம்பிக்கையை உணர்த்த இவ்வாறு பல கோயில்கள் இருந்தாலும் இதில் கலைகள் அதிகமாக இருக்கின்றதால் பயணிகள் அதிகமாக வந்து பார்வையிடுகிறார்கள். இங்குள்ள கலாச்சாரங்களை பார்க்கும் பொழுது வித்தியாசமாக வைத்திருக்கின்றது.
4. நைட் சஃபாரி
சிங்கப்பூர் பயணத்தை அழகாக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் 1984 இல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அனைவரும் வந்து செல்லும் இடமாக தான் இருக்கின்றது. விலங்குகளை ரசித்து கொண்டே, இங்குள்ள மூன்று உணவகங்களில் உணவருந்தி மகிழலாம். இது தான் இடத்தின் சிறப்பாகவும் கூறப்படுகின்றது.
5. சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா
பட்ஜெட்டிற்குள் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க வேண்டும் என நினைத்தால் தேசிய ஆர்க்கிட் தோட்டத்திற்கு செல்லலாம். பார்ப்பதற்கு அதிகமான இடங்களை கொண்டு இயற்கையோடு எம்மை இணைந்து கொள்கின்றது. இந்த தோட்டத்தில் 60,000 க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. மேலும் இது உலகின் முதல் குழந்தைகளுக்கான தோட்டம் எனவும் அழைக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |