நயனை ஓரங்கட்டிய கோலிவுட் நடிகைகள்.. அப்போ லேடி சூப்பர் ஸ்டாருக்கு எவ்வளவு சம்பளம்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளின் விவரங்கள் தொடர்பாக தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
சினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகைகளின் மார்கட் உயர உயர அவர்களின் சம்பளமும் உயர்ந்து கொண்டே போகும். ஹீரோக்களுக்கு நிகராக கோலிவுட்டில் நயன்தாரா மட்டும் தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவரையே கீழே தள்ளிவிட்டு அதிக சம்பளம் வாங்கும் அளவிற்கு பிரபலங்கள் நிறைந்து விட்டனர்.
அந்த வகையில், நயனை விட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் சம்பள விவரங்களை தொடர்ந்து காணலாம்.
அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்
1. நயன்தாரா
மலையாளத்தில் ஒரு லோக்கல் சேனலில் சினிமா பயணத்தை துவங்கிய நயன்தாரா தற்போது கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார். இவர் நடிப்பில் “ஜவான்” திரைப்படம் வெளியாகியாகி 1100 கோடி ரூபாய் வசூல் பெற்றது. இந்த வருடம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைளின் ஒருவராக நயன்தாரா பார்க்கப்படுகிறார். இவர் ஒரு படத்திற்கு 11 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
2. திரிஷா
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் த்ரிஷா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
தன்னுடைய இரண்டாவது பயணத்தை ஆரம்பித்த த்ரிஷா “ பொன்னியின் செல்வன்” படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அத்துடன் லியோ படத்திலும் கதாநாயகியாக நடித்திருப்பார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.
3. தமன்னா
காவாலா பாடல் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்றி கொடுத்தவர் தான் நடிகை தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த கேடி படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர். அத்துடன் தமன்னா தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
4. பூஜா ஹெக்டே
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் தான் பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படம் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார்.
பின்னர் இவர் கடந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து அவரின் சினிமா பயணம் ஆரம்பமாகியுள்ளது. தற்போது பூஜா ஹெக்டே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் இந்த வருடம் ஒரு படத்திற்கு ஆறு கோடி சம்பளம் வாங்குகிறார்.
5. சமந்தா
தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. தன்னுடைய உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். தற்போது ஓய்வில் இருக்கும் சமந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். ஆனாலும் இவருக்கான மார்க்கட் இன்னும் இறங்கவில்லை. ஒரு படத்திற்காக 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |