ஆபத்துக்களின் அரசான திகழும் டாப் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்கள் அடிப்படி தோற்றத்தில் ஒன்றுபட்டிருந்தாலும், தோற்றம், நிறம், குணங்கள், திறமைகள் என்பவற்றால் வேறுப்பட்டவர்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடி தாக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் தங்களின் சுயநலத்துக்காகவும், தேவைகளுக்காகவும் எதையும் செய்ய துணியும் மிகவும் ஆபத்தான ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
மிகுந்த ஆபத்தான ராசிகளின் பட்டியலில் முதன்மை வகிக்கும் விருச்சிக ராசியினர் மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் உணர்வுகளை தங்களுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் நெருங்கியவர்களிடம் கூட இவர்கள் ரகசியம் காப்பார்கள்.
இந்த ராசியினர் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபத்தானவர்களாக மாறுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.இவர்களை எதிரியாக்கிக்கொள்வது மிகவும் ஆபத்தானது.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்களின் சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள்.
இவர்கள் தேவை முழுமையாக நிறைவேறும் வரையில் தான் இவர்கள் ஒரு உறவில் நிலைத்திருப்பார்கள். இவர்களிடம் பொறுப்புணர்ச்சியை எதிர்பார்த்தால் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள்.
இந்த ராசியினரை கட்டுப்படுத்த முயல்வதும், இவர்களின் சுதந்திரத்துக்கு தடை விதிப்பதும் எதிர்ப்பாராதளவுக்கு ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்களின் தனித்துவத்தை எப்போதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இருக்கும் இடத்தில் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற குணம் கொண்ட இவர்கள் முதலிடத்தை பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்ளாக இருப்பார்கள்.
இவர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு ஆபத்தான எதிரியாக மாறிவிடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |