பல் கூச்சமா? உடனே விடுபட இந்த இயற்கை பொருட்கள் போதும்...!
பல் கூச்சம் பரவலாக இருக்கும் ஒரு பிரச்சனை.
இந்த பல் கூச்சத்தை தடுக்கும் வீட்டு முறைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பல் கூச்சத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்திருக்கவும். பிறகு எண்ணெய் கொப்புளித்து விடவும். தினமும் காலையில் இதை செய்து வந்தால் படிப்படியாக பல் கூச்சம் குறையும்.
உப்பு நீர்
உப்பு நீரை கொண்டு பல் துலக்குவது பல் வலியை குறைக்க உதவும். வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் அளவு உப்பு கலந்து தினமும் இரண்டு முறை கொப்புளித்து வந்தால் பல் கூச்சம் குறையக்கூடும்.
தயிர்
தயிர் பல் பற்சிப்பியின் செயல்பாடுகளை குறைக்க உதவுகிறது. தயிர் ஒரு கிண்ணம் அளவு எடுத்துகொள்ளலாம். வெறும் தயிர் சேர்க்க வேண்டும். தினமும் ஒரு கப் வீதம் தயிர் சேர்க்கலாம்.
கொய்யா இலைகள்
கொய்யா இலைகள் ஐந்து எடுத்து நன்றாக கழுவி பிறகு 1 முதல் 2 நிமிடங்கள் பற்களில் படும்படி மென்று உமிழவும். தினமும் இரண்டு முறை மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் உணர்திறன் குறையும்.
பூண்டு
1 பல் பூண்டை எடுத்து சில துளிகள் தண்ணீர், சிட்டிகை உப்பு சேர்த்து நசுக்கி விடவும் மேலும் சில துளிகள் தண்ணீர் சேர்த்து சிட்டிகை உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லில் கலவையை பயன்படுத்துங்கள். பிறகு 15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு வாய் கொப்புளியுங்கள். தினமும் ஒரு முறை இதை செய்து வந்தால் பல் கூச்சம் குறையும்.