டீ, காபி அதிகமாக குடிப்பவரா நீங்கள்? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
டீ மற்றும் காபி அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காபி, டீ பருகுபவரா?
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபருக்கு புதிய நாளின் ஆரம்பம் காபி, டீ இல்லாமல் ஆரம்பமாவது இல்லை. அந்த அளவிற்கு காபி, டீ அனைவருக்கும் பிடித்தமான பானமாக மாறியுள்ளது.
சில நபர்கள் மணிக்கு ஒருமுறை இந்த பானத்தை அருந்தும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இவ்வாறு அடிக்கடி அருந்துவதால், சுறுசுறுப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர்.
ஆனால் இது மிகப்பெரிய தவறாகும். காலை மற்றும் மாலை இரண்டு வேளை மட்டும் தேநீர் அருந்திக் கொள்ளலாம். ஆனால் உற்சாகத்தை தரும் காபி, டீ அளவுக்கு மீறினால் பல உடல்நல பிரச்சினைகளையும் கொண்டு வரக்கூடியது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டீ, காபி அதிகம் குடிப்பதால் ஏற்படும் புதிய வகை பிரச்சினை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
பிரச்சனை என்ன?
அதாவது நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 3 கப் அல்லது 300 மி.லி டீ, காபி எடுத்துக் கொள்வது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் உற்சாகத்துடனும், ஆக்ஜினேற்றிகள் ஆரோக்கியத்தையும் அளிக்குமாம்.
ஆனால் கொஞ்சம் அதிகரித்து நாள் ஒன்றிக்கு 400 மி.லி டீ,காபி அருந்துபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கமின்மை, பதட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கின்றன. ஒரு நாளில் 5 கப் அல்லது 500 மி.லி என்று பருகினால் ரத்த சோகை அபாயம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
வெறும் வயிற்றில் அதிகமாக டீ, காபி குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தி நீண்ட கால வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கும்.
உணவுக்கு பிறகு டீ, காபி குடிப்பது சிறந்தது, அதுவும் அளவுக்கு அதிகமாக குடிக்காமல் இருப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |