தக்காளி அமோக விளைச்சல் வேண்டுமா? இந்த பொருளை வைத்து உரம் செய்ங்க
இப்போதெல்லாம் சந்தையில் கிடைக்கும் காய்கறிகள் மிகவும் இரசாயனம் கலந்ததாக காணப்படுகின்றது. இதை விரும்பாத மக்கள் தங்களின் வசதிக்கேற்ப வீட்டியேலயே சில காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.
அப்படி ஆரம்பித்தவர்கள் தோட்டத்தில் தக்காளி, வெள்ளரி, சுரைக்காய் போன்ற காய்கறிகள் நல்ல செழிப்பாக வளர்ந்து பூத்து குலுங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதற்கு சரியான ஊட்டச்சத்து கொடுப்பது அவசியம்.
இந்த வளர்ச்சி நிலையில், மண்ணிலிருந்து அதிக ஊட்டச்சத்துக்களைத் தாவரங்கள் உறிஞ்சுவதால், உடனடியாக சத்துக்களைச் சேர்ப்பது மிக அவசியம்.
தாமதமான வளர்ச்சி, இலைகள் மஞ்சளாவது, பூக்கள் காய்வது போன்ற அறிகுறிகள் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதற்கான அறிகுறியாகும். இதற்கு வீட்டில் உரம் செய்யலாம். இதற்கு ஒரு பொருள் இருந்தா போதும்.

செய்முறை
வெதுவெதுப்பான நீர் 6 அல்லது 8 லீட்டர்,
உலர் ஈஸ்ட் 20 கிராம்,
சக்கரை ஒரு கைபிடி
இந்த மூன்று பொருட்களையும் ஒரு பெரிய வாளியில் (5 கேலன் பக்கெட்) சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து ஒருமுறை தண்ணீரை நன்றாக கலக்கி விட்டு அதை எடனே தாவரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
இந்த கலவையானத தயார் செய்த உடன் பயன்படுத்தவில்லை என்றால் அது தாவரத்திற்கு கொடுக்கும் பலன் குறையும். எனவே முடிந்தவரை இதை உடனே பயன்படுத்துங்கள்.

தோட்டப் பயிர்களுக்கு ஈஸ்ட்டை உரமாக்குவது ஏன்?
ஈஸ்டை நாம் திரவ உரமாக்கி வழங்கினால் அது தாவரங்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்தை கொடுக்கும். இதனால் தாவரங்கள் மிகவும் வேகமாக வளரும்.
ஈஸ்ட்டில் உள்ள வைட்டமின் B, இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை தவிர்த்து, செடிகளைப் பச்சையாகவும் ஆரோக்கியமாகவும் வளரச் செய்கிறது.
இந்த ஈஸ்ட் திரவ உரம் பயன்படுத்துவதன் மூலம் பெரிய மற்றும் அதிக காய்களை அறுவடை செய்யலாம். இந்த உரத்தை கோடைகாலங்களில் அதாவது சத்து தேவை மிக அதிகமாக இருக்கும்போது, ஒரு சீசனுக்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தி அதிகமான இரசாயனமற்ற ஆரோக்கியமான காய்கறிகளை அறுவடை செய்யுங்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |