குமட்டலா? வாந்தியா? இந்த தேநீர் குடிச்சா சும்மா இல்ல.. சூப்பரா வேலை செய்யும்
இஞ்சி உணவில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று. இதனை உணவில் சேர்ப்பதனால் சுவை மற்றும் நறுமணம் அதிகமாக இருக்கும்.
இஞ்சி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த தீர்வாக உள்ளது. செரிமானம் முதல் வாயு பிரச்சினை வரையிலான நோய்களுக்கு மருந்தாக செயற்படும்.
ஏனெனின் இஞ்சியில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகமாகவே உள்ளன. இஞ்சியை ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அதே சமயம், இஞ்சியை உணவில் சேர்ப்பதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளையும் இது சரிச் செய்கிறது.
இவ்வளவு சிறப்புமிக்க இஞ்சி சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி சாற்றின் பலன்கள்
1. மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு இஞ்சி சிறந்த மருந்தாக செயற்படும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் குமட்டல், வாந்தி பிரச்சினைகளுக்கு இஞ்சியில் தீர்வு உள்ளது. கீமோதெரபி மற்றும் இயக்க நோயால் ஏற்படும் குமட்டலையும் சரிச் செய்கிறது.
2. இஞ்சி சாற்றில் இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்தும் ஆற்றல் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுபாட்டில் இருக்கும். HSBC நிலைகளை மேம்படுத்தும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3. தினசரி உணவில் இஞ்சி சாறு சேர்த்து கொள்ளும் பொழுது உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம், உடலில் உள்ள வீக்கமும் கட்டுக்குள் இருக்கும். மூட்டுவலி உள்ளவர்களும் இஞ்சி சாற்றை உணவில் கலந்து கொள்வது நல்லது.
4. இஞ்சியில், எல்.டி.எல் அளவைக் குறைப்பதற்கும், எச்.டி.எல் அளவை அதிகரிப்பதற்கும் ஆற்றல் உள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் இஞ்சி சாற்றை குடிக்கலாம்.
5. இஞ்சி சாற்றை குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறையும். அதே சமயம், அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் இஞ்சி சாற்றை குடிப்பதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
