ஆண்களின் கவனத்திற்கு! இந்த மறக்கறியை அதிகம் உணவில் சேர்ப்பவரா நீங்கள்?
சமீபத்திய ஆய்வொன்றின் படி ஒரு கிழமையில் குறிப்பிட்டளவு தக்காளி உடலில் சேர்த்துக்கொள்வதால் புரோஸ்டேட் புற்றுநோயின் அளவு குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பல உணவுகள் மற்றும் பானங்களில் கூட பயன்படுத்தப்படும் சுவையை அதிகரிக்கும் பழமான தக்காளி நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களின் புதையல் ஆகும்.
புற்றுநோய்க்கு எதிரியான தக்காளி!
தக்காளி மற்றும் தக்காளி சேர்க்கப்பட்ட பொருட்கள் ஃபோலேட், மற்றும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.
தக்காளியில் அதிக அளவில் கரோட்டினாய்டுகள் லைகோபீன் போன்ற மிக முக்கியமான சத்துகள் உள்ளடங்குகிறது.
அதைத் தொடர்ந்து பீட்டா கரோட்டின், காமா-கரோட்டின் மற்றும் பைட்டோன் மற்றும் பல சிறிய கரோட்டினாய்டுகளும் காணப்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட் லைகோபீன் ஆனது மனித உடலுக்கு பல முக்கிய ஆரோக்கியம் தரும் நன்மைகளை வழங்குகிறது.
சில ஆய்வுகளின் படி, இதய நோய்கள் மற்றும் ஒரு சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் திறனை தக்காளி கொண்டுள்ளது.
வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தக்காளியில் காணப்படுகிறது.
தக்காளி நிறைந்த உணவுகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று சமிபத்தியஆய்வு இப்போது வெளியாகியுள்ளது.
தக்காளியிகளை ஒரு கிழமைக்கு 10 பகுதிகளுக்கு மேல் உட்கொள்ளும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.