பரவி வரும் தக்காளி காய்ச்சல் - பீதியில் உறைந்த பெற்றோர்கள்
தக்காளி காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் பாதிக்கப்பட்டு வருவது மக்களை அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் தற்போது தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளை பாதிக்கும் காய்ச்சல்
மேலும், காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அடிக்கடி சிறுநீர் வெளியேறுதா? உடனே மருத்துவரிடம் ஓடுங்கள்
இதனால், பொதுமக்களிடம் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.