அடிக்கடி சிறுநீர் வெளியேறுதா? உடனே மருத்துவரிடம் ஓடுங்கள்... இந்த ஆபத்தான நோய் குறி வைத்துவிட்டது
கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் சர்க்கரைநோய் என்று அழைக்கின்றோம்.
சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும்.
பரபரப்பை ஏற்படுத்திய சித்ராவின் மரணம்...இன்ஸ்டாவில் இருந்த முக்கிய புகைப்படங்கள் திடீரென அழிப்பு!
இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம் என ஒரு பெரும் பட்டியலே உண்டு.
சர்க்கரைநோய் ஒரு முறை வந்து விட்டால் அது வாழ்நாள் முழுவதும் எம்மை தொடரும். முற்றிலும் இதனை குணப்படுத்த முடியாது.
ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் - ரத்தத்தில் அதிகமான சர்க்கரை இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். சாதாரணமாக தண்ணீர் அதிகமாக குடித்தால் சிறுநீர் அடிக்கடி வெளியேறுவது வழக்கம்.
ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதை விட அதிகமாக சிறுநீர் வெளியேறிவிடும். சாதாரண மனிதர்கள் ஒரு நாளைக்கு 4 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதிலிருந்து இரு மடங்கு அதிகமான சிறுநீர் கழிப்பார்கள்.
காட்டிற்குள் காதலியுடன் ஒதுங்கிய நபர் - பதறியடித்து ஓடி வந்த ஊர்மக்கள்! சோக சம்பவம்
சோர்வு - ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் நாள்முழுவதும் அதிகமான நேரங்களில் சோர்வாகவே நமக்கு இருக்கும். குறிப்பாக அதிகமான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சோர்வு ஏற்படும்.
தாகம் அதிகரிக்கும் - நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அதிகமாக சிறுநீர் வெளியேறும். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இது தான் நீரழிவு நோயின் ஆரம்பகட்ட அறிகுறி.
கண் பார்வை மங்குதல் - கண்பார்வை மங்குதல் என்பது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான மற்றொரு அறிகுறியாகும். இது மிகவும் ஆரம்ப காலத்திலேயே தென்படும். திடீரென்று நமது பார்வையில் சில மாற்றம் ஏற்படும். பார்வை தெளிவாக இல்லாமல் சற்று மங்கலாக இருக்கும்.
இது உடலில் உள்ள அதிகமான சர்க்கரையின் அளவு நம்மை இப்படிச் செய்கிறது. உடலில் உள்ள தேவையற்ற சர்க்கரை மற்றும் தண்ணீரானது நம் கண்களின் நடுவே வந்துவிடும். இதனாலேயே நம் பார்வை மங்கலாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்
தலைவலி - நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். தலைவலி ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் மேலே உள்ள காரணங்களோடு தலைவலியும் உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டிருந்தால் நிச்சயமாக நீங்கள் உங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நோய்தொற்று - சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு நோய்தொற்று மிகவும் எளிதாக ஏற்பட்டுவிடும். சிறிய சிறிய பருவநிலை மாற்றம் முதல் இது ஆரம்பமாகிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது. இதனால் நமது உடல், கிருமிகளுக்கு எதிராக போராட மிகவும் கஷ்டப்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு வேறுவிதமான வியாதிகளும் வந்துவிடுகிறது.
சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்
எச்சரிக்கை
மேற்கண்ட அறிகுறிகள் எல்லாமே சர்க்கரை நோய் உங்கள் உடலில் நுழைவாயிலில் நின்றதற்கான அறிகுறிகளே.
அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
சில சமயங்களில் இவை ஃப்ரீ டயாபட்டிக் ஆகவும் இருக்கலாம். அதாவது சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இவை.
இவர்கள் சரியான உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தால் வாழ்நாளில் சர்க்கரை நோயால் உண்டாகும் உபாதைகளை தவிர்த்துவிடலாம்.
எனக்கு இப்போதுதான் 30 வயதாகிறது எனக்கு எப்படி சர்க்கரை நோய் சாத்தியம் என்று அலட்சியம் கொள்ளாமல் கவனிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.