தக்காளி தினமும் சாப்பிடலாமா? முகம் வசீகரிக்க இப்படி பயன்படுத்துங்க
ஆண், பெண் என அனைவருக்குமே அழகாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும்.
அதற்காக பலவிதமான க்ரீம்களை பயன்படுத்துவார்கள், ஆனால் மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே முகத்தை அழகுபடுத்தலாம்.
குறிப்பாக குளிர்காலங்களில் முகம் வறண்டு போவதை தடுக்க நாம் தினமும் எடுக்கும் உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.
இதைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்,
இதற்காக Moisturizer பயன்படுத்துவதை விட, என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருந்தால் அழகாக பிரகாசிப்போம்.
முட்டை, தக்காளி, கீரைகள், பால் மற்றும் பால் தொடர்பான பொருட்கள், வாழைப்பழம், வால்நட், விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
விட்டமின் இ அதிகம் கொண்ட உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டாலே சருமம் மின்னும்.
தக்காளி எப்படி உதவுகிறது?
தக்காளி உங்களது முகத்தில் எண்ணெய் தன்மையை தக்கவைப்பதோடு, அழுக்குகளையும் நீக்கும்.
தக்காளியை துண்டுகளாக நறுக்கி, 5 முதல் 10 நிமிடங்கள் முகத்தில் நன்றாக தேய்த்துவிட்டு சாதாரண நீரில் கழுவலாம்.
இதனால் நுண்துளைகளில் உள்ள அழுக்குகள் கூட நீக்கப்பட்டு கரும்புள்ளிகளும் குறையும்.
தொடர்ந்து வாரத்திற்கு இரண்டுமுறை இதை செய்துவந்தாலே நல்ல மாற்றத்தை காணலாம்.
வெண்மை நிறத்திற்கு
தக்காளியை துண்டாக நறுக்கிவிட்டு, சிறிதளவு காபி தூளில் தொட்டு முகத்தில் மசாஜ் செய்யவும், இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.
இதேபோன்று தக்காளியுடன் மோரை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம், இப்படி செய்தால் சூரிய ஒளியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.