வெறும் வயிற்றில் ஊற வைத்த வால்நட்! நாள் முழுவதும் ஆரோக்கியமா இருப்பீங்க
வால்நட் என்னும் அக்ரூட் மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது.
இது பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. கொழுப்பு , சோடியம் ,பொட்டாசியம், புரதச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த வால்நட்டில் உள்ளது.
மேலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டி ஆக்சிடன்ட்கள், பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம் காணப்படுகின்றது. இது உடலுக்கு பல வகையாக அற்புத பலன்களை வாரி வழங்குகின்றது.
அந்த வகையில் ஊறவைத்த வால்நட்டை சாப்பிடுவதன் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மூளையின் ஆற்றலை அதிகரிக்கும்
வால்நட்டில் உள்ள புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றலை நன்றாக செயல்படத் தூண்டுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த வால்நட்ஸை தினமும் 5 வீதம் காலையில் எழுந்ததும் சாப்பிடக் கொடுக்கலாம்.
தினமும் ஊறவைத்த வால்நட்ஸை பெண்கள் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதோடு வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும். ஆகவே புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் வால்நட்ஸை தவறாமல் சாப்பிட்டு வரலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
வால்நட்ஸை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால் நம் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் அவ்வளவு எளிதாக தாக்கிவிட முடியாது.
தூக்கமின்மையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் இரவில் கூட சாப்பிட்ட பின் பாலில் சேர்த்தோ அல்லது தனியாகவோ அக்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம். தூக்கமின்மை பிரச்சினை நீங்கி நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.
செரிமான பிரச்சினை சரியாகும்
தினமும் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்கம் பிரச்சனை சரியாகும்.
சில துளிகள் பால் சேர்த்து சில வால்நட்ஸ் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து, சருமத்துக்கு ஸ்கிரப்பாகக் கூட பயன்படுத்தலாம்.
சருமத்தில் உள்ள மாசுக்கள் மற்றும் கருந்திட்டுக்களை அகற்றும் ஆற்றல் கொண்டது.
செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வருவதினால் செரிமான பிரச்சனை சரியாகும். மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும்.
பித்தப்பை கற்களுக்கு தீர்வு
பித்தப்பைகளில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை இந்த அக்ரூட்டுக்கு உண்டு. எனவே பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் இந்த ஊறவைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் பித்தப்பை கற்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும். குறிப்பாக வலியின்றி கற்கள் வெளியேறும்.
உங்கள் டயட்டில் அதிகமாக அக்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம். இது நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
அக்ரூட்டில் அதிக அளவில் பயோட்டின் என்னும் வைட்டமின் பி7 ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுவதால், இது தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைக்கிறது. தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.