டாய்லெட் பேப்பர் கேக் பார்த்துருக்கீங்களா? விமர்சனங்களை அள்ளும் video
டாய்லெட் பேப்பரை கொதிநீரில் போட்டால் என்ன நடக்கும் என்பதை காட்டும் வகையில், காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டாய்லெட் பேப்பர் கேக்
தற்போது சமூக வலைத்தளங்களில் குறிப்புக்கள் பற்றிய காணொளிகள் அதிகமாக பகிரப்படுகின்றன.
உதாரணமாக சமையல் குறிப்பு, வீட்டு வேலைகளை எப்படி செய்யலாம் என்பதற்கான குறிப்பு, மன அழுத்தங்கள் தொடர்பான கருத்துக்கள், ஆடைகள் அணிவதற்கான குறிப்பு இப்படி ஏகப்பட்ட விடயங்களுக்கு சமூக வலைத்தளங்களில் குறிப்புகள் பகிரப்படுகின்றன.
அந்த வகையில், டாய்லெட் பேப்பரை கொதிநீரில் போட்டு உருண்டை செய்வது போன்ற காணொளியொன்று வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது நன்றாக கொதிக்கும் நீரில் டாய்லெட் பேப்பரை போடுகிறார்.
அதன் பின்னர் நன்றாக வேக விட்டு, பேப்பரை மாத்திரம் தனியாக பாத்திரத்திற்கு மாற்றி, அதனை பேப்பரை நன்றாக அரைக்கிறார்கள். அதனுடன் காபித்தூள் கொஞ்சமாக கலந்து உருண்டையாக பிடித்து, கேக் போன்று செய்து பூச்சிகள், எலிகள் வரும் பகுதியில் வைக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இரண்டு முறை பார்த்தாலும் என்ன சொல்ல வருகிறார் என புரியாத இணையவாசிகள்,“ எங்களுடைய நேரத்தை திருப்பி தாருங்கள்..” என கலாய்க்கும் வகையிலான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இது போன்ற காணொளிகள் தினமும் லட்சக்கணக்கில் பகிரப்பட்டு, பயனர்களின் நேரத்தை களவாடிக் கொண்டிருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
