கழிவறையில் துர்நாற்றம் ஏற்படுகின்றதா? கரப்பான் பூச்சி, பல்லி, தவளையை அடித்துவிரட்டும் ஒரே பொருள்
தண்ணீர் அதிகம் புழங்கும் இடத்தில் எப்போதும், கரப்பான் பூச்சி பல்லி, தவளை போன்றவை இருக்கும்.
குறிப்பாக நம்முடைய வீடுகளில் கிச்சன், பாத்ரூம் போன்ற இடங்களில் அதிக அளவில் கரப்பான் பூச்சி பல்லி போன்றவை அதிக அளவில் உலா வந்துநமக்கு தொல்லை கொடுக்கும். இவற்றை முற்றிலும் ஒழிப்பது, மிகவும் கடினமான ஒன்றாகும்.
நாம் இவற்றை மிகவும் சுலபமான முறையில் கட்டுப்படுத்த துவங்கிவிட்டால், இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விடும். இறுதியில், முற்றிலும் அழிந்து போய் விடும்.

சுலபமாக விரட்டுவது எப்படி?
நம்முடைய வீடுகளில் பீரோவில் துணிகளுக்கு இடையில் போட்டு வைக்கும் பாச்சா உருண்டை எனப்படும் நாப்தலின் பால்ஸ் சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நாப்தலின் பந்துகளை பாத்ரூம்களில் எங்காவது மூலைக்கு மூலை போட்டு வைக்கலாம். இப்படி செய்தால், இவற்றின் வாசம் மூலை முடுக்குகளில் மறைந்துள்ள கரப்பான் பூச்சி, பல்லி, தவளை போன்றவற்றை அண்ட விடாமல் ஓட ஓட விரட்டிவிடும். குறிப்பாக கரப்பான் பூச்சி தொல்லை சுத்தமாக இருக்காது.
கழிவறை எப்பொழுதும் துர்நாற்றம் எடுத்தால் அரை பக்கெட் தண்ணீரில் சிறிதளவு ஷாம்பு ஊற்றி கலந்து கழிவறையில் சுற்றி நன்றாக தெளித்து விடுவதுடன், கழிவறையை கழுவிவிடுவதற்கும் இந்த ஷாம்பு தண்ணீரை பயன்படுத்தினால் துர்நாற்றம் ஏற்படாது.
