கழிவறையில் துர்நாற்றம் வீசுகின்றதா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
வீட்டில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டிய கழிவறையே. கழிவறையினால் பல நோய்கள் பரவுகின்றது. சில வீடுகளில் கழிவறையை எவ்வளவு தான் சுத்தமாக வைத்தாலும் துர்நாற்றம் ஏற்படும்.
இவ்வாறு துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு சில செயல்களை நாம் தவிர்க்க வேண்டும். அவற்றினை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நாப்கின்
இவற்றை கழிவறையில் வீசக் கூடாது. நாப்கின் டிஸ்போசல் மெஷின் இருந்தால் அதை பயன்படுத்தலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பொது குப்பைத் தொட்டியில், காகிதத்தில் மடித்து அப்புறப்படுத்தவும்.
ஆணுறை
ஆணுறைகளை, ஃப்ளஷ் செய்தால் அவை செல்லும் பாதையில் எங்கேயோ ஓரிடத்தில் அடைப்பை ஏற்படுத்திவிடக்கூடும். குப்பைத்தொட்டியில் டிஸ்யூ பேப்பரில் மடித்து போட்டு அப்புறப்படுத்தவும்.
தலைமுடி
சில வீடுகளில் எங்கு அவதானித்தாலும் முடியாக கிடக்கும். ஆனால் இவ்வாறு முடி கழிவறையில் காணப்பட்டால் அது ஆபத்தாகும். ஆம் கழிவுநீர் செல்லும் வழியிலோ, செப்டிக் டேங்க சென்றடையும் வழியிலோ அடைத்துக்கொள்ளும். ஆகையால் அவற்றினை சுத்தமாக அப்புறப்படுத்தவும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டிஸ்யூ
கழிவறையில் வைத்து குழந்தையைச் சுத்தம் செய்தவுடன், டிஸ்யூவை அப்படியே உள்ளே வீசி ஃப்ளஷ் செய்யக்கூடாது. இவ்வாறு செய்தால் வழியிலேயே அடைத்துக்கொள்ளும் இதனால் துர்நாற்றம் வீசும் அபாயம் ஏற்படலாம்.