வடிவேலுவைப் போல ஒரு பாயை வைத்துக் கொண்டு இந்த குழந்தை படும் பாட்டை பாருங்க!
இணையத்தை அவ்வப்போது சில வீடியோக்கள் ஆக்கிரமித்து வரும் அந்த வீடியோ அப்படி அப்படி பகிரப்பட்டு வைரலாகி வரும்.
அப்படி இணையத்தில் வைரலாகும் வீடியோவைப் பார்த்து நாம் சந்தோசப்பட்டிருக்கிறோம், அழுது இருக்கிறோம், ஆச்சரியப்பட்டிருக்கிறோம் ஏன் புல்லரித்துப் போகும் படி கூட சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வைரல் வீடியோ
அதேபோல இணையத்தில் இன்றும் ஒரு வீடியோ அதிகம் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு சிறுமி சுருள் பாயை கையில் வைத்துக் கொண்டு விரிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தை எங்கேயோ பார்த்தது போல இருக்கும் உங்களுக்கு ஆம், இந்த சம்பவத்தை முன்னதாகவே வடிவேலு நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.
அதே போல ஆனைமலை பகுதியைச் சேர்ந்த சிறுமி யோகா செய்வதற்காக யோகா மேட்டை விரிக்க முயற்சிக்கும் போது அது இங்கும் நிற்காமல் அங்கும் நிற்காமல் சுருண்டு சுருண்டு அந்தக் சிறுமியை கடுப்பேத்தியிருக்கிறது.
இந்தக் காணொளி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.