நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி ... தங்க விலையில் அதிரடி சரிவு!
today gold and silver rate : தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.இது நகை வாங்க காத்திருந்தவர்களுக்கும் நகை பிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.11,915 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,000 குறைந்து ரூ.95,320 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால், நகை வாங்க திட்டமிடுபவர்கள் அடுத்தடுத்த நாட்களில் விலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து முடிவு செய்வது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |