தங்கம் - வெள்ளி விலையில் மீண்டும் சரிவு! இன்றைய விலை நிலவரம்
இன்றைய (செப்டம்பர் 29) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலம்.
செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதன் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகி வருகிறது.

குறிப்பாக, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாகக் குறைந்தது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த நகை பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
நேற்றைய மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,665 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,320 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலையில் சரிவு தொடர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.13,640 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,09,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.11,410 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.91,280 ஆகவும் உள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |