பிக் பாஸ் 10: விஜய் சேதுபதியின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் 7 சீசன்களும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இதையடுத்து 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்றார்.தனது தனித்துவமான அணுகுமுறையால் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது பிக் பாஸ் சீசன் 10 ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.அதே நேரத்தில், விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் இணையத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தின.
இதற்கு, நிகழ்ச்சிக்குள் இடம்பெறும் கருத்துகளையே தான் பேசியதாக விஜய் சேதுபதியும் விஜய் தொலைக்காட்சி தரப்பும் விளக்கம் அளித்தனர்.
சம்பள விபரம்
இந்நிலையில், பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு சுமார் ரூ.70 முதல் 80 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சல்மான் கானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக சம்பளம் பெறும் நடிகராக விஜய் சேதுபதி அறியப்படுகின்றார்.
மேலும், சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சுமார் ரூ.150 கோடி பெறுவதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |