நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி - தங்க விலையில் மீண்டும் சரிவு!
இன்றைய (செப்டம்பர் 22) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த விரிவான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து காணப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினத்தையும் தொடர்ந்து இன்றும் விலை குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் மேலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின்விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.11,955 ஆகவும், ஒரு சவரனின் விலை ரூ.680 குறைந்து ரூ.95,640 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையும் சரிவு
[BUQ9QO]
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |