எதிர்பாராத செலவு- எந்த ராசியினருக்கு கவனம் தேவை! இன்றைய ராசிப்பலன்(31.01.2024)
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
இதேவேளை இன்று சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
மேஷம்
இன்றய நாள் உங்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். பூர்வீக கொத்துக்கள் இன்று கையில் கிடைக்கலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகள் பற்றி கவலை இருந்தால் இது இன்றய நாள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்
நீங்கள் இன்று வங்கி கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. கட்டுமான பணி இருந்தால் புதிய ஒப்பந்தங்கள் மூலம் அதை ஆரம்பிப்பீர்கள். வீட்டு வேதையான பொருட்களை வாங்கும் சந்தர்பம் கிட்டும். மலர் வணிகம் செய்பவர்கள் விலை உயர்த்தினால் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
சகோதரர்களால் பிரச்சனைகள் உருவாகும். வெளியூர் பயணத்தில் அலைச்சல் அதிகமாக காணப்படும். நோய் வரும் அதற்காக மருத்துவமனை செல்வீர்கள். பணத்தை பக்குவமாக கையாளுவீர்கள். ஆடு மாடு வளர்த்தால் அதன் மூலம் லாபம் கிட்டும்.
கடகம்
விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டும் நாள். நீங்கள் குத்தைகைக்கு விட்டிருந்தால் அதன் மூலம் லாபம் பெறுவீர்கள். கோவில்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள், பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
சிம்மம்
எடுத்த காரியம் நிறைவடையாததால் மனக்கவலை அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்க கூடாது. கவனக்குறைவோடு வாகனம் ஓட்டக்கூடாது விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பம் வரும்.
கன்னி
நீங்கள் நம்பியவர்கள் உங்களை கைவிடுவார்கள், இதனால் வேதனைப்படுவீர்கள். வேலை இடத்தில் செய்யாத தவறுக்கு குற்றவாளியாக நிற்பீர்கள். தேவையற்ற விவாதங்கள் வரும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்படும். காதலர்களின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். கடன்கள் அதிகரிக்கும்.
துலாம்
கையில் பணம் அதிகமாக கிடைக்கும். எதிபார்ப்பை விட தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அரச பணியாளர்களாக இருந்தால் சிரமமின்றி வேலை செய்யும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றத்தால் பெருமைப்படுவீர்கள்.
விருச்சிகம்
பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களின் சேமிப்பை தற்போது பெற்றுக் கொள்வீர்கள்.தொழிலில் பல மடங்கு லாபம் கிடைக்கும். வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
தனுசு
வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்த திட்டம் இடுவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். பாராட்டு புகழ் பெறும் நாள்.
மகரம்
உங்களால் உதவி பெற்றவர்கள் உங்ஙளுக்கு எதிராக திரும்புவார்கள். துரோகம் செய்யும் நண்பர்களை கண்டுபிடிப்பீர்கள். யாரையும் கடுமையாக பேச கூடாது சந்திராஸ்டம் என்பதால் சவனம் தேவை.
கும்பம்
உங்கள் பேச்சுத்திறன் மற்றும் செயலால் மற்றவர்களை கவர்வீர்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்தால் செல்வாக்கு கிடைக்கும். கட்டுமாத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதய நோயாளருக்கு உதவி செய்வீர்கள். சந்திராஸ்ட நாள் என்பதால் ஆடம்பர செலவு கூடாது.
மீனம்
மற்றவர்களுக்கு நல்லது செய்தால் கெட்ட பேர் கிடைக்கும். குடும்பத்தின் மூலம் மனக்குழப்பம் அடைவீர்கள். வியாபாரத்தில் சிக்கல் உண்டாகும். செய்யாத குற்றத்திற்கு தண்டனை கிடைக்கும். அடுத்தவர் பேச்சை கேட்டு செயல்பட கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்கினால் கஷ்டம் வரும்.