திருமணத்திற்கு முன்பு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்: சினேகா குறித்து பயில்வான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் காதலித்து கல்யாணம் பண்ணி கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவர்களை பற்றி கமீபத்தில் இணையத்தில் விவாகரத்து பெற்று விட்டார்கள் என வதந்தி பரப்பபபட்டது. அந்த நிலையில் சினேகாவை பற்றி பயில்வான் யாருக்கும் தெரியாத ஒரு விடயத்தை கூறியிருக்கிறார்.
நடிகை சினேகா என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, உன்னை நினைத்து, ஜனா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் என்ற படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
பிரசன்னாவும், சினேகாவும் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற படத்தில் நடிக்கும் போது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
பயில்வான்
பயில்வான் நடிகர் நடிகைகளை எப்போதும் குறிப்பிட்டு சர்சையான விடயங்களை பேசுவார். அவர் தற்போது சினேகா பற்றி பலரும் அறியாத ஒரு விடயத்தை கூறியிருக்கிறார்.
அதில், நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே வேறொருவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்று கூறியுள்ளார்.
இந்த வகையில் தெலுங்கு தயாரிப்பாளர் நாக் ரவியை திருமணம் செய்து கொள்ள பெரியவர்களால் நிச்சயம் செய்து வைக்கப்ட்டது.
என்னவென்று காரணம் தெரியவில்லை. இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நிச்சயதார்த்ததோடு முடிந்துவிட்டதாக பயில்வான் கூறியுள்ளார்.
இதையடுத்துத்தான், நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் எந்த காரணத்திற்காக நாக் ரவியை சினேகா வேண்டாம் என்று சொன்னார் என்று தெரியவில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.