கமலை கிண்டலடித்த பெண் போட்டியாளர்! எலிமினேஷனில் ஏற்பட்ட மாற்றம்
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் விளையாட்டில் சீரியஸ்னஸ் இல்லாமல் செயற்படுகிறார்கள் என கமல் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
வெளியேறிய போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் 9 ஆம் திகதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து தற்போது வரைக்கும் சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்.
இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் மற்றும் இலட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கபட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபன் நாமினேஷனில் சிக்கிய பிரபலங்கள்
இந்நிலையில் ஏழாவது வாரத்தின் இறுதி நாளான இன்று நாமினேஷனுக்கு சென்ற ராபர்ட் மாஸ்டர், ராம், அமுதவாணன், மணி, கதிரவன், அசீம், தனலெட்சுமி ஆகிய போட்டியாளர்களில் ஒரு எமினேட்டாகவுள்ளார்.
இதில் கடந்த இரண்டு நாட்களாக ராபர்ட் மாஸ்டர் தான் வெளியேறுவார் என ரசிகளிடையே பரவலாக பேசப்படுகிறது.
ஏனெனில் பிக் பாஸில் தொடர்ந்து இருப்பதற்காக ரக்ஷிதா பின்னால் சுற்றி வருகிறார் என சர்ச்சைகள் எழுந்தது.
போட்டியாளர்களின் அலட்சியம்
இதன்படி, “இன்றைய தினம் யார் சேவ் ஆவார்” என கமல் கேட்ட போது போட்டியாளர்கள் நகைக்கும் வகையில் பதிலளித்துள்ளார்கள்.
இதில் கடுப்பான கமல் எந்நேரமும் விளையாட்டும் கேலியும் அழகு அல்ல என்று போட்டியாளர்களை எச்சரித்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.