பிக் பாஸ் தொகுப்பாளரில் மாற்றம்! இனி கமல் இல்லையாம்..அதிரடியாக வெளியாகிய தகவல்..
பிக் பாஸின் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி தொகுப்பாளரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தொகுப்பாளரில் மாற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது ஆறாவது சீசன் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் பரபரப்பு நிலை மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் உலகத்திலுள்ள அனைத்து தமிழர்களும் பார்க்கக் கூடிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் ஹாசன் உடல் நிலை கோளாறு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் ரீ என்ட்றி கொடுக்கும் பிரபலம்
இதனால் இவர் உடல் நிலை சரியாகும் வரை போன சீசன்களை தொகுத்து வழங்கிய சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மிகவும் பிரபல்யமான பல கோடி ரசிகர்களை கொண்ட இந்நிகழ்வை தொகுத்து வழங்க விஷேட திறனும் ஆளுமையும் கொண்ட தொகுப்பாளர் வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.