முயற்சியால் வெற்றி கிட்டும் நாள்: இன்றைய ராசிபலன்(06.02.2024)
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.
1. மேஷம்
கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் தீரும். முடியாமல் இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சி பலிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
2. ரிஷபம்
மன அமைதியற்ற நிலை ஏற்படும். மற்றவர்கள் உங்களின் குறைகளை சொன்னால் கோபப்பட கூடாது. ஞாபக சக்தி குறைபாட்டால் பிரச்சனை வந்து நீங்கும். பிரச்சனையான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும்.
3. மிதுனம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். மின்சார பொருட்கள் வாங்குவீர்கள்.புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.தன்னம்பிக்கை உண்டாகும் நாள்.
4. கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் புதுமை செய்து எல்லோரையும் ஈர்ப்பீர்கள். உங்களுக்கு அமோகமான நாள்.
5. சிம்மம்
புதிதான திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். உத்தியோகத்தில் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
6. கன்னி
எதிர்ப்புகள் அடங்கும் நாள். பழைய நண்பர்களை சந்திக்கும் நாள். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டு. உழைப்பால் உயரும் நாள்.
7. துலாம்
புதிய முயற்சிகளால் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தைரியமாக இருக்கும் நாள்.
8. விருச்சிகம்
மன உளைச்சலில் இருந்து தெளிவு கிடைக்கும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பீர்கள். போட்டிகள் குறையும். கல்யாண முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நன்மை உண்டாகும் நாள்.
9. தனுசு
உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பாக இருக்கும். வேலைகள் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருப்பார்கள். விழிப்புணர்வுடன் இருக்கும் நாள்.
10. மகரம்
சில காரியங்களை போராடி முடிக்க வேண்டும். மற்றவர்களால் உங்களுக்கு பிரச்சனை வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போக வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோத வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
11. கும்பம்
உச்சாகமாக வெயற்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் கடைமையுணர்வுடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். மரியாதை அதிகமாக கிடைக்கும்.
12. மீனம்
உங்களுடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் கிடைக்கும். முயற்சி செய்தால் வெற்றி கிட்டும் நாள்.