100 கோடி வருமானம் ஈட்டும் பெண்! இந்த பிரபலத்தின் மகளா? என்ன தொழில் செய்கிறார்?
எம். எஸ் விஸ்வநாதனின் மகளான லதா மோகன் அழகுக்கலை தொழில் செய்வதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை லாபம் சம்பாதித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
எம்.எஸ்.விஸ்வநாதன்
மெல்லிசை மெலடி கிங் என்றால் அது எம் எஸ் விஸ்வநாதன் தான். இவர் தமிழ் திரையுலகின் மிகப்பெரும் இசையமைப்பாளர் ஆவார். இவரும் ராமமூர்த்தியும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
இவரின் திறமைக்காக ஜெயலலிதா இவருக்கு 60 தங்க காசுகளையும் புதிய காரையும் பரிசாக அளித்து திரையிசை சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.
இவர் ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவரின் ஒரு மகளான லதா மோகன் என்பவர் அழகுக் கலையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
இதனால் லதா மோகன் அழகுக்கலை நிலையத்தை ஆரம்பித்தார். இதற்கு அவரின் தந்தை எம். எஸ் விஸ்வநாதன் இந்த தொழில் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையில் லதா மோகன் இதை ஒரு சவாலாக எடுத்து செய்தார்.
100 கோடி வருமானம்
லதா மோகன் முதலில் கன்யா என்ற ஒரு அழகு கலை நிறுவனத்தை ஆரம்பித்தார். இவரின் முதல் அழகுக்கலை நிலையத்தை ஆரம்பித்து வைத்தவர் ஸ்ரீபிரியா ஆவார்.
இந்த அழகுக்கலை நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 50 ற்கும் மேற்பட்ட கிளைகளில் இயங்கி வருகின்றது.
இப்போது லதா மோகனின் பிஸ்னஸ் 'ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் அழகு நிலையங்களை இந்தியா முழுவதும் வைத்துள்ளார்.
இவரது பணியகத்தில் மொத்தமாக 450 உழியர்கள் வேலை செய்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.
லதா மோகன் இந்த அழகுக்கலை வைத்து நடத்துவதால் ஒரு ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஒரு தொழிலதிபராக வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.