தங்கம் விலையில் திடீர் மாற்றம்! இனி குறைய வாய்ப்புள்ளதா?
கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம்.
எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
தங்கத்தின் இன்றைய விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.59-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் இன்று சற்று ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.