தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்... இன்றைய விலை(18.11.2023) என்ன தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக ஏற்றம் இறக்கத்தை கண்டுவரும் நிலையில், இன்று எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாம் அதே விலையில் விற்கப்படுகின்றது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,700ஆகவும், சவரன், ரூ.45,600 ஆகவும் இருந்து வந்தது.
இன்றும் கிராமுக்கு 5,700 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 45 ஆயிரத்து 600 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.79.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.79,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
தற்போது தங்கத்தின் விலை எந்தவொரு மாற்றம் இல்லாமல் இருந்து வந்தாலும் 8 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |