கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொட்ட தங்கம்! இன்றைய தங்கம் விலை என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்றும், சரவணுக்கு 440ரூபாய் அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களில் ரூபாய் 900 அதிகரித்து காணப்படுகின்றது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து, 4,820 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 440 அதிகரித்து, ரூபாய் 38 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மக்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணம், பங்கு சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுவதாலும், சர்வதேச சந்தையின் சூழல் தற்போது சாதகமாக இருப்பதால் தங்கம் விலை உயர்ந்து வருகின்றதாம். மேலும் டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் ஏற்றம் கண்டுள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்து வருகின்றது.
ஆனால் இன்று வெள்ளி விலை எந்தவொரு மாற்றம் இல்லாமல் கிராமுக்கு 50 காசு அதிகரித்து ரூ.67.50 ஆகவும், கிலோ ரூ.67,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.