தங்கம் வாங்க இன்று போகாதீங்க! அதிரடி உயர்வால் அதிர்ச்சி
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,760 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,740 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து 38,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.67 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 5,139 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,159 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 41,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 160 ரூபாய் உயர்ந்து 41,272 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மற்ற நகரங்களில் விலை எவ்வளவு?
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,710 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,750 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,750 ஆகவும், கேரளாவில் ரூ.4,742 ஆகவும், டெல்லியில் ரூ.4,750 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,750 ஆகவும், ஒசூரில் ரூ.4,742 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,746 ஆகவும் இருக்கிறது.
