இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கம் சவரணுக்கு ரூ. 104 அதிகரித்து காணப்படுகின்றது.
தங்கத்தின் விலை கடந்த இரு வாரங்களாக இறங்கு முகத்தில் இருப்பதால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவும், தங்க நகைகள் வாங்கவும் இது சரியான நேரம் என்று முதலீட்டாளர்கள் ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.
தங்கத்தின் இன்றைய விலை
22 காரட்ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது.. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 13ரூபாயும், சவரணுக்கு 104 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,676க்கும், சவரண் ரூ.37,408க்கும் விற்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13உயர்ந்து, ரூ4,689 ஆகவும், சவரணுக்கு ரூ.104 ஏற்றம் கண்டு ரூ.37,512க்கும் விற்கப்படுகிறது.
