இந்த நாளில் தங்கம் வாங்குங்க! மூட்டை மூட்டையா சேரும்... இதை விட நல்ல நேரம் கிடையாது?
தங்கம் எல்லோருக்கும் சேர்ந்து விடாது. தங்கம் வாங்கவும் ஜாதகத்தில் கிரக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும்.
பொன்னவன் எனப்படும் குரு கிரகம் நன்றாக இருந்தால் மட்டுமே தங்கத்தை வாங்கவோ சேமிக்கவோ முடியும்.
ஜாதகத்தில் குரு கிரகம் புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் சாரம் பெற்று இருந்தாலும் அடிக்கடி தங்கம் வாங்கும் யோகம் அந்த ஜாதகருக்கு உண்டு என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கு 5ஆம் வீட்டில் உள்ள கிரகம் லக்னத்திற்கு 2ஆம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2ஆம் வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் தங்கம் அதிகம் வாங்குபவர்கவும், அந்த தங்கத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் எனவும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
தங்கத்தை திரி புஷ்கர யோகங்கள் அமையும் நாட்களில் வாங்கினால் அடகு கடைக்கு போகாமல் தங்கும்.
திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம்,கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள் திதிகள் நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும்.
இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும்.
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,ஹஸ்தம், அசுவினி,பூசம், அபிஜித்,ரோகிணி,உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி.
ஞாயிறு செவ்வாய் கிழமைகளில் மேஷம் விருச்சிகம் சிம்மம் லக்கினங்களில் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் மிருகசிரீடம் ரேவதி சித்திரை அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் வாங்க அதிர்ஷ்டம் தரும்.
எப்போது வாங்கலாம் விற்கலாம்
ஒருவேளை முதலீட்டிற்காக தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,மிருகசிரீடம், ரேவதி, சித்திரை,அனுஷம்,ஹஸ்தம், அசுவினி,பூசம்,அபிஜித் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திங்கள் வெள்ளி வியாழன் புதன் கிழமைகளில் சுப லக்கினங்களில் வாங்க நன்மை உண்டாகும்.
ஒரு நபரின் ஜாதகத்தில் பாப கிரகமான ராகு, சுபகிரகமான சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் நட்பு பெற்ற வீட்டில் ராகு, சுக்கிரன் இணைந்து இருந்தாலோ அந்த ஜாதகருக்கு கூடுதல் வருமானம் மூலம் செல்வம், நகை சேமிப்பு பெருகும்.