தொடர்ந்து கடுமையாக உயர்ந்த தங்கத்தின் விலை(20.01.2024)... காரணம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது சற்று வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,810ஆகவும், சவரன், ரூ.46,480 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, 5,825 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்து, 46 ஆயிரத்து 600 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது அதனை கடந்து அதிகரித்து செல்வது பாமர மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.77.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.77,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |