தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்; இன்று வாங்கலாமா?
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், தொடர் தங்க அதிகரிப்புக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு, சர்வதேச சந்தையில்
நாணய விலையில் மாற்றம், இந்தியா மற்றும் அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம், மற்றும் மத்திய வங்கிகளின் தங்கம் இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச் சந்தை, உக்ரைன் மீதான ரஷ்ய போர், என பல காரணங்கள் கூறப்படுகிறது.
அதனடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4683 என்றும், ஒரு சவரன் விலை ரூ.37,464 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5082 எனவும், ஒரு சவரன் ரூ.40,656 என்றும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 10காசுகள் குறைந்து ரூ.65.20 என்றும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.65,200 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.