தங்கம் வாங்க இன்று நல்ல நாளாம்!! விலை அதிரடி வீழ்ச்சி
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சியடைய, பாதுகாப்பான ஒன்று என தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தொடங்கினர்.
இதனால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது, தொடர்ந்து ஏற்றம், இறக்கங்களை கண்ட தங்கத்தின் விலை இன்று அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சென்னையில் இன்று (நவம்பர் 3) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,482 ஆகக் குறைந்துள்ளது.
நேற்று இதன் விலை 4,503 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 168 ரூபாய் குறைந்து 35,856 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்று 4,867 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,846 ரூபாயாகக் குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.60 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.