மளமளவென சரியும் தங்கம் விலை! மகிழ்ச்சியில் பாமர மக்கள்
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்றும் விலை குறைந்துள்ளது பாமர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை தற்போது ஐந்து நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,245ஆகவும், சவரன், ரூ.41,960 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, 5,235 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து, ரூபாய் 41 ஆயிரத்து 880 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரங்களில் 43 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது கடந்த ஐந்து நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலை குறைவதற்கு காரணம் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதும், பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் வட்டி உயர்வு, போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் பண்டிகை காலங்கள் முடிந்துவிட்டதால் தங்கம் விலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதே போன்று வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 பைசா குறைந்து ரூ.70.90 ஆகவும், கிலோவிற்கு ரூ.600 குறைந்து ரூ.70,600 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.