தங்கம் வாங்கும் போது தங்க நகைப்பற்றி இந்த விடயங்கள் உங்களுக்கு தெரியுமா?
நாம் நகைவாங்கும் போது அந்த தங்கத்திற்கு எப்படி கணக்கிட்டு சொல்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அதிலும் செய்கூலி, சேதாரம் என்றும் சொல்வார்கள் அப்படியென்றால் என்னவென்று தெரியுமா? இந்த பதிவில் அவை என்ன என்று பார்க்கலாம்.
நகைவாங்கும் போது கவனிக்கப்படவேண்டியவை
- தங்க நகை தரமானதாக இருக்க வேண்டும்
- துய்மையானதாக இருக்க வேண்டும்
- தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும்
- விலையை சரிபார்க்க வேண்டும்
- நகைகளுக்கு உண்டான ரசீதுகளை தவறாமல் வாங்க வேண்டும்
- நகைகளில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக அவை வாங்கிய கடைகளில் எடுத்துச்சென்று அந்தக் கடைக்காரர்களிடம் என்ன பிரச்சினை என்பதைத் தெரியப்படுத்தலாம்
செய்கூலி என்றால் என்ன?
செய்கூலி என்பது நாம் ஒரு நகையை வாங்குகிறோம் என்றால் அந்த நகையை தனி ஒரு ஆள் மட்டும் செய்திருக்க மாட்டார்கள். அந்த நகைக்கு பாலிஸ் போட, கட்டிங் செய்ய, வடிவமைக்க என அதற்கு நிறைய ஆட்கள் வேலை பார்ப்பார்கள். அந்த வகையில் இவ்வாறு செய்யும் நகைக்கு அவர்கள் அனைவருக்கும் பணம் கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுப்பது தான் செய்கூலி ஆகும்.
சேதாரம் என்றால் என்ன?
சேதாரம் என்றால் ஒரு நகையின் அளவு 2.1/2 கிராம் என்றால் அந்த நகை அனைத்தும் தங்கத்தால் ஆனதா என்றால் கிடையாது. 2 கிராம் நகைக்கு குறைந்தபட்சம் 4 கிராம் தங்கம் தேவைப்படும். அந்த 4 கிராம் இருந்தால் மட்டுமே இந்த 2 கிராம்நகை கிடைக்கும். அந்த வகையில் மீதி 2 கிராம் தங்கம் சேதாரம் ஆகும்.