இன்றைய தங்கம் விலை! கடும் வீழ்ச்சியில் தங்கம்: நிபுணர்கள் கூறிய நல்ல செய்தி
தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.500க்கு மேல் சரிந்துள்ள நிலையில், நடுத்தரக் குடும்பத்தினருக்கும், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,855க்கும், சவரன் ரூ.38,840க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை இன்று காலை 2வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 6 ரூபாய் சரிந்து, ரூ.4,849 ஆகவும், சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792 ஆகவும் விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்துள்ளது நல்ல செய்தியாக அமைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.500க்கு மேல் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வலுப்பெறுவது போன்றவை தங்கம் விலை குறைவுக்கான காரணங்களாகும்.
கடந்த இரு வாரங்களாகவே கடும் ஏற்ற, இறக்கத்துடனே இருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்தது. ஆனால், அடுத்த இரு நாட்களில் திடீர் சரிவு ஏற்பட்டு, மீண்டும் ரூ.38ஆயிரத்துக்குள் சரிந்தது.
இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் விலைக் குறைவைப் பயன்படுத்தி வாங்குவது சிறந்தது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 10 பைசா குறைந்து, ரூ.63.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.63,300க்கும் விற்கப்படுகிறது.