இன்றைய தங்கம் விலை! மிகப்பெரும் வீழ்ச்சியில் தங்கம்: மகிழ்ச்சியில் மக்கள்
தங்கம் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. வாரத்தின் முதல் இரு நாட்கள் தங்கத்தின் விலையில் உயர்வு இருந்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 33 ரூபாயும், சவரனுக்கு ரூ.264 விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,893க்கும், சவரன் ரூ.39,144க்கும் விற்பனை ஆனது.
இன்று காலை தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.33 குறைந்து, ரூ.4,860ஆகவும், சவரனுக்கு ரூ.264 சரிந்து, ரூ.38,880க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை இந்த வாரம் உயர்வுடன் தொடங்கி இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு 348 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த இரு நாட்களில் சவரனுக்கு ரூ.288 குறை்தும் ஊகிக்க முடியாத நிலையில் இருக்கிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா குறைந்து ரூ.64.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.64,000க்கும் விற்கப்படுகிறது.