கொட்டும் மழையிலும் உயர்ந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம் எப்போது?
தங்கம் விலை எப்பொழுதும் ஏற்றம் இறக்கம் கண்ட நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து, நவம்பர் மாதத்தில் தங்கம் விலை குறைவும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சென்னையில் தற்போது கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இருப்பினும், கடைகள் அடைக்கப்பட்ட நிலையிலும், தங்கம் விலை உயர்விலேயே உள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4544.00 என விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 24 உயர்ந்து ரூபாய் 36352.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4908.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39264.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 69.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64800.00 எனவும் விற்பனையாகி வருகிறது.