இன்று அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை: வாங்குவதற்கு நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க
கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம்.
எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.
உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,840-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 152 குறைந்து 38,720-க்கு விற்பனையில் உள்ளது.
நாள் முழுவதும் எனர்ஜியுடன் இருக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 66.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 66,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.
இலங்கையில் தொடரும் பதற்றம்! வீட்டைவிட்டு வெளியேறிய ராஜபக்சே: வெளிநாடு தப்புகிறாரா?